கலாச்சாரத்தைப் பேணிக்காப்பதில் கலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. கலாச்சாரம் அழியாது இருந்தால் மட்டுமே ஓர் இனம் வாழ முடியும். ஓர் இனத்துக்கான அடையாளங்கள் இல்லாது போகும் போது அவ்வினம் தனது தன்மை அற்றதாகிவிடும். நாம் தமிழ் இனம் என்று தலைநிமிர்ந்து நிற்க வேண்டுமாயின், தமிழ் பேசுவது மட்டுமன்றி நமது நடை, உடை, பாவனை, உணவு முறை, வழிபாட்டு முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, பண்டிகைகள் எனப்பல அம்சங்கள் உண்டு. இவை ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையவை. எனவே எமது இனத்தைக் காப்பாற்றும் போராட்டத்தில் இளம் தலைமுறையினர் தொடக்கம் முதியோர், மதகுருககள், ஆசிரியர்கள், கலைஞர்கள் என அனைவரும் இணைந்து செயற்பட்டால் மட்டுமே பயன் உண்டு.
ஆசிரியர்கள், கலைஞர்கள் என்ற பங்களிப்பை சமூகத்திற்கு வழங்குவதில் கடந்த 22 ஆண்டுகளாக தனது கடமையை மிகச் செம்மையாக வழங்கி வந்துள்ளது கலைமன்றம். 1993ம் ஆண்டு திரு. சந்ரு, ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு அவர்களால் கனடாவில் ஸ்தாபிக்கப்பட்டது “கலைமன்றம்“ எனப்படும் நடன, இசை மற்றும் யோகாசனாக் கல்லூரி.
இக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை தனது மாணவர்களின் வளர்ச்சி குறித்துப் பல திட்டங்களை அறிமுகம் செய்து கொண்டே வருவதை அவதானிக்க முடிகின்றது. ஸ்தாபிக்கப்பட்ட அதே ஆண்டின் நடுப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தனது ஆண்டு விழாவினை கனடாவில் மாபெரும் அரங்கொன்றில் சிறப்பாக நடத்தியது. தனது துரிதமானதும், திடமானதுமான வளர்ச்சியினைப் பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.
அடுத்த இரு ஆண்டுகளில் நேர்த்தியான ஓர் பாடத்திட்டத்தினை உருவாக்கி முதன் முதலில் கடனாவில் நடனத்திற்கான பரீட்சையினை ஆரம்பித்த பெருமை இக்கல்லூரியினையும் அதன் அதிபர் ஸ்ரீமதி நிறைஞ்சன சந்ருவினையுமே சாரும்.
1995ம் ஆண்டு தொடக்கம் முதல் இன்றுவரை 100க்கும் மேற்பட்ட மாணவர்களை அரங்கேற்றம் செய்துள்ளதும், பல சிறந்த உள்ளூர், வெளியூர் கலைஞர்களை முதன்முதலில் கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு அவர்களால் என்பதும் பலராலும் மறுக்கப்பட்டாத உண்மை.
2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவின் புகைபடத் தொகுப்பு ( இதில் அழுத்தவும் )
மேலும் பரீட்சையை மட்டும் நடத்தி சான்றிதழ்களை வழங்குவது மட்டுமன்றி, பரீட்சையில் இறுதி ஆண்டினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு பல அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் முன்னிலையில் பிரமாண்டமான பட்டமளிப்பு விழாவினை நடத்தி, ஆசிரியர்தராதரப்பத்திரமும், பரீட்சையை நிறைவு செய்ததோடு, அரங்கேற்றத்தினையும் முடித்துள்ள மாணவர்களுக்கு “நிருத்த நிறைஞர்“ பட்டத்தினையும் தங்கப்பதக்கத்தினையும் வழங்கி கலை உலகிற்கு ஒவ்வொரு ஆண்டும் பல ஆசிரியர்களையும், திறமையான கலைஞர்களையும் பிரசவித்துக் கொண்டு இருக்கின்றது.
நிறைஞ்சனா சந்ருவின் மாணவர்களின் திறமைக்கண்டு கனடாவில் உள்ள பெரும் நடனக் கம்பெனிகள் தமது நிகழ்ச்சிகளுக்கு கலைமன்ற மாணவர்களை உபயோகித்துக் கொள்வது தக்க சான்றாக அமைகின்றது.
இதன் மூலம் பல மாணவர்களுக்கு வேறுநாடுகள் சென்று நடன நிகழ்ச்சிகள் நடத்தும் சந்தர்ப்பத்தையும், அனுபவத்தையும் வழங்கி வருகின்றார் நிறைஞ்சனா சந்ரு.
அத்தோடு நின்று விடாது கலைமன்றத்தின் பட்டதாரிகளுக்கான சங்கம் ஒன்றினை அமைத்து ஒவ்வொரு ஆண்டும் நடன நிகழ்வினை வழங்கி வருவதோடு தம்மால் இயன்ற நிதி உதவியினையும் இந்நிகழ்ச்சிகள் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் தனது மாணவர்களை வழிநாடத்தி வருவது பெரும்பணியாகும். இந்நிகழ்வுகள் கல்லூரியின் பட்டதாரி மாணவர்களின் கூட்டு முயற்சியினால் மட்டுமே உருவாக்கப்பட்டு வழங்கப்படுவது மாணவர்களின் தனித்து இயங்கும் ஆற்றலையும் கண்டு வியக்க வைக்கின்றது.
2014 ஆம் ஆண்டு அமெரிக்காவில் St Louis இல் நடைபெற்ற FeTNA நிகழ்வில் எல்லோராலும் பாராட்டைப் பெற்ற மாபெரும் நாட்டிய நாடகம்
9 ஆம் ஆண்டு தொடக்கம் 12ஆம் ஆண்டுவரை கற்கும் மாணவர்களுக்கு நடனத்திற்கான ‘கிரெடிட்டை“ (Credit) வழங்குவதோடு சமூக நிகழ்வுகளில் தொண்டுபுரியும் மாணவர்களுக்கு அதற்கான சேவைச்சான்றிதழையும் வழங்குவதால் பாடசாலையில் மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கு பெரும் பயன் உள்ளதாக அமைவது குறிப்பிடத்தக்கது.
22 ஆண்டுகளில் 3 – 4 வயது கனடியக் குழந்தைகளுக்கு நடனம் கற்பித்து, பட்டதாரிகளாக்கி, ஆசிரியர்களாக்கி அவர்களின் மாணவர்களையும் பரீட்சையில் பங்கேற்க வைத்துளளதோடு 3வது தலைமுறையினரைக் கலைஞர்களாகப் பார்க்கும் பெருமைக்குரியவர் ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ரு என்று கூறலாம்.
தனது தோட்டத்தில் பூத்த மலர்கள் என்றுமே வாடாது இருக்க வரமளித்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.
மேலும், இவ்வாண்டு அவரின் வாரிசான குமாரி ஐஸ்வரியா சந்ருவினால் இசை வயலின் வகுப்புகளை எதிர்வரும் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை “வைகாசி விசாக“ தினத்தன்று தொடங்கப்பட உள்ளது. ஐஸ்வரியா சந்ரு பற்றி கனடிய மக்களுக்கு நாம் கூறத்தேவையில்லை. இவர் தனது 3 வயதில் இருந்து பல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துக் கொண்டவர். இசை, வயலின், நடனம் என்பவற்றை முறையாகக் கற்றுக் தேறி பல பட்டங்கள், விருதுகளைத் தனதாக்கியவர். பல மேடைகளில் பாடி, ஆடி, நடித்தும், பல நிகழ்ச்சிகளை தயாரித்தும் வழங்கியது மட்டுமன்றி பல நாடுகள் சென்று நிகழ்ச்சிகள் வழங்கிய பெருமைக்கும் உரியவர். அவniranchana-2ரின் அனுபவத்தினையும், புதிய அணுகுமுறையினையும், அவரின் கற்பித்தல் மூலம் நடனத்தில் நிரூபித்தவர். தற்போது பல பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்கி இசை, வயலின் ஆகிய இரு பாடங்களையும் கலைமன்றத்தில் ஆரம்பிக்கின்றார்.
கலை மன்றத்தின் குரு ஸ்ரீமதி நிறைஞ்சனா சந்ருவினதும், அவருடன் இணைந்து பணியாற்றும் குமாரி ஐஸ்வரியா சந்ருவினதும்,மேலும் அங்கு பணியாற்றும அனைத்து ஆசிரியர்களினதும் கலைப்பணிகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.